இலங்கை

திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டிகள்!

Published

on

திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டிகள்!

திருகோணமலை-நிலாவெளி பகுதியில் நேற்றிரவு முச்சக்கர வண்டியொன்று திடீரென தீப்பற்றி எரிந்து சேதமாகியுள்ளது.

தீயினை கட்டுப்படுத்த பொதுமக்கள் முனைந்தபோதும் முச்சக்கர வண்டியின் பெரும் பகுதி தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரியவருகிறது.

Advertisement

தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேபோன்று கொழும்பு பொரளை பிரதேசத்தில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு முன்பாக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றும் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்த தீ விபத்து நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.[ஒ]

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version