இலங்கை

திரெளபதி அம்மன் ஆலயத்தில் தீ மிதிப்பு விழா; பக்தர்கள் பரவசம்

Published

on

திரெளபதி அம்மன் ஆலயத்தில் தீ மிதிப்பு விழா; பக்தர்கள் பரவசம்

  புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற உடப்பு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூர உற்சவ நிகழ்வான தீ மிதிப்பு விழா நேற்று (6) நடைபெற்றது.

உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத பார்த்தசாரதி ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த மாதம் 20 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 18 நாட்கள் இடம்பெற்று வருகின்றது.

Advertisement

அந்த வகையில், ஆலய முற்றவெளியில் இருந்து நேற்று இரவு 7.00 மணியளவில் கரகம் புறப்பட்டு ஆண்டிமுனை வரை வெளி வீதி வலம் வந்து, இரவு 8.30 மணியளவில் அம்மனை பிரார்த்தித்தபடி நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதிப்பில் பக்தி பூர்வமாக இறங்கி தமது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

தீ மிதிப்பு விழாவை காண பெருமளவான பகதர்கள் ஆலயத்திற்கு வருகை தந்ததுடன், அம்மனின் அருளாசிகளையும் பெற்று சென்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version