பொழுதுபோக்கு

புலி படம் பண்ண நான் விரும்பல… இதுக்காத்தான் நடித்தேன்; விஜய் – ஸ்ரீதேவி பற்றி மனம் திறந்த சுதீப்!

Published

on

புலி படம் பண்ண நான் விரும்பல… இதுக்காத்தான் நடித்தேன்; விஜய் – ஸ்ரீதேவி பற்றி மனம் திறந்த சுதீப்!

கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தாலும், தமிழ் சினிமாவில் தனக்காக ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ள நடிகர் தான் கிச்சா சுதீப். விஜய் நடிப்பில் வெளியான புலி படத்தில் வில்லனாக நடித்த இவர், அந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.வடிவேலு நடிப்பில் வெளியான இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிம்புதேவன். இந்த படத்திற்கு பிறகு அறை எண் 305-ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் 3 களவாணிகளும், ஆகிய படங்களை இயக்கிய சிம்பு தேவன், 2015-ம் ஆண்டு விஜய் நடிப்பில் புலி என்ற படத்தை இயக்கியிருந்தார். வேதாள உலகத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, சுதீப், பிரபு ஆகியோருடன் பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு நடிகை ஸ்ரீதேவி இந்த படத்தின் மூலம் ரீ-என்டரி கொடுத்திருந்தார். இந்த படத்தில் நடிக்க ஒப்புக்’கொண்டது ஏன்? முதல்நாள் படப்பிடிப்பில் என்ன நடந்தது என்பது குறித்து சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் நடிகர் சுதீப் கூறியுள்ளார். இந்த படத்தின் கதையை என்னிடம் சொல்லும்போது எனக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை. 3 மாதங்கள் இந்த ஸ்கிரிப்ட்க்கு நான் சம்மதம் சொல்லவில்லை. ஆனாலும் அவர்கள் தொடர்ந்து பேசி வந்தனர்.விஜய் சார் என்னிடம் பேசியதும், நான் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆனா விஜய் சார் நானும் நடிக்கும்போது இன்னும் ஸ்ராங்கா இருக்கனும். வில்லனாக நடிப்பது நான் தயங்கவில்லை. முதல்நாள் செட்டுக்கு போய்விட்டு வந்துவிட்டேன். 2-வது நாளும் அதேபோல் செட்டில் உட்காந்திருந்தேன். யாரும் கண்டுகொள்ளவில்லை. திடீரென அனைவரும் எழுந்து நின்றார்கள். என்னடாது 2-வது நாள் நமக்கு அவ்வளவு மரியாதை கொடுக்கிறார்களா என்று நினைத்தேன். பின்னால் திரும்பி பார்த்தால் ஸ்ரீதேவி மேடம் வந்துட்டு இருக்காங்க. எனக்கு ஒரே ஷாக் ஆகிவிட்டது. படக்குழுவினர் இயக்குனர் இந்த படத்தில் ஸ்ரீதேவி நடிப்பதாக எனக்கு சொல்லவே இல்லை. அதன்பிறகு இந்த படத்தில் நடிக்க முழு மனதுடன் ஏற்றுக்கொண்டேன். முதல் காட்சியில் நான் விஜய் சார், ஸ்ரீதேவி மேடம் நடிக்கும் காட்சி. அப்போது ஸ்ரீதேவி மேடம் நடித்து முடித்தவுடன் நான் நடிக்க வேண்டும். ஆனால் அவரது நடிப்பை பார்த்து மெய்மறந்து நான் நடிப்பதையே மறந்துவிட்டேன். பக்கத்தில் இருந்து விஜய் சார் தலைவா உங்க டைலக், தலைவா உங்க டைலக், என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார். அதன்பிறகு சுதாரித்துக்கொண்டு, நடித்தேன்.முதல்முறை அவரது நடிப்பை நேரில் பார்த்ததால், அடுத்து என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. அதே சமயம், விஜய் சார், என்ன அழைத்து சொல்லிக்கொண்டே இருந்தார். அவர் பார்க்கத்தான் அமைதியாக இருப்பார். ஸ்டார்ட் கேமரா என்று சொல்லிவிட்டால், உடனடியாக வேறு ஒரு ஆளாக மாறிவிடுவார் என்று கூறியுள்ளார் சுதீப்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version