இலங்கை

மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை இன்று “எச்சரிக்கை” மட்டத்தில்!

Published

on

மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை இன்று “எச்சரிக்கை” மட்டத்தில்!

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, 
மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் இன்று வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, “எச்சரிக்கை” மட்டத்தில் இருக்கக்கூடும் எனவும்

Advertisement

இந்தக் குறியீடு, வளிமண்டல ஈரப்பதம் மற்றும் உலகளாவிய கணித வானிலை முன்னறிவிப்பு மாதிரி தரவுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட அதிகபட்ச வெப்பநிலை மதிப்புகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. 

இது உண்மையான வளிமண்டல வெப்பநிலை அல்ல, மாறாக உடலால் உணரப்படும் வெப்பநிலையைக் குறிக்கிறது எனவும்

மக்கள் வெப்பத்தால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளைத் தவிர்க்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

இதேவேளை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

மேலும் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். 

Advertisement

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.[ஒ]

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version