உலகம்

இஸ்ரேல் ஹமாஸுக்கு இடையில் புதிய ஒப்பந்தம்!

Published

on

இஸ்ரேல் ஹமாஸுக்கு இடையில் புதிய ஒப்பந்தம்!

காசாவின் போர் நிறுத்த பேச்சுவார்தையின்போது, எஞ்சியுள்ள அனைத்து பணயக் கைதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிப்பதற்கான ஒப்பந்தம் தொடர்பாக, கவனம் செலுத்தவுள்ளதாக இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெத்தான்யாகு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான எகிப்திய அதிகாரிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகளுக்காக, தமது குழு கெய்ரோவுக்கு சென்றுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையிலான மறைமுக பேச்சுவார்த்தைகள் முறிந்த பின்னர், இஸ்ரேல் தனது இராணுவத் தாக்குதலை விரிவுபடுத்தியதுடன், காசா பகுதியைக் கைப்பற்றுவதற்கான சர்ச்சைக்குரிய திட்டத்தையும் இஸ்ரேல் அறிவித்தது. இருப்பினும், காசாவை கைப்பற்றும் புதிய நடவடிக்கை ஒக்டோபர் மாதம் வரையில் தொடர்வதற்கு இஸ்ரேல் இராணுவம் தயாராக இல்லை என்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இராணுவத் தயாரிப்புகளுக்கு நேரம் ஒதுக்குவது மற்றும் துணைப்படையினரை இணைத்துக் கொள்வது போன்ற செயற்திட்டங்களை இஸ்ரேல் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளமையே இதற்கான காரணமாகும் என்று, இஸ்ரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version