சினிமா
அடேங்கப்பா.!! ஆலியா பட்டின் கனவு மாளிகையை பார்த்தீர்களா.? வைரல் வீடியோ
அடேங்கப்பா.!! ஆலியா பட்டின் கனவு மாளிகையை பார்த்தீர்களா.? வைரல் வீடியோ
பாலிவுட்டின் முன்னணி பிரபலங்களாக ரன்பீர் கபூர் – ஆலியா பட் திகழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து 2022ஆம் ஆண்டு திருமணம் செய்தனர். தற்போது இவர்களுக்கு ஒரு அழகிய மகளும் உள்ளார். தென்னிந்திய திரையுலகில் பிரபலமான ஆலியா பட் தான் நடிக்கும் ஒரு படத்திற்கு 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகின்றாராம். அதேபோல அவருடைய கணவரான ரன்பீர் கபூர் 50 கோடி ரூபாய் வரையில் சம்பளம் வாங்குகின்றார். இவர்கள் இருவரின் சொத்து மதிப்பும் கிட்டத்தட்ட 720 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகின்றது. இதில் ஆலியா பட்டின் சொத்து மதிப்பு மட்டுமே 517 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல ரன்பீர் கபூரின் சொத்து மதிப்பு 203 கோடி எனவும் தகவல்கள் கசிந்து இருந்தன. இதனால் ஆலியா பட் தனது கணவரை விட அதிக சொத்துகளுக்கு அதிபதியாக காணப்படுகின்றார். இந்த நிலையில், பாந்த்ராவில் உள்ள பாலி ஹில் பகுதியில் ஆலியா பட் – ரன்பீர் கபூர் தம்பதிகள் புதிய வீடு ஒன்றை கட்டி உள்ளனர். சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த வீட்டின் கட்டுமான பணிகள் யாவும் நிறைவடைந்துள்ளனவாம். மேலும் ஆறு மாடிக் கட்டிடமாக அமைக்கப்பட்ட இந்த வீட்டில் அவர்கள் இருவரும் மிக விரைவிலேயே குடியேர உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த பிரம்மாண்ட வீடு தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகின்றன.