டி.வி

அட்ஜஸ்ட்மென்ட் குறித்து ஓபனாக பேசிய சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை.. என்ன கூறியுள்ளார் பாருங்க

Published

on

அட்ஜஸ்ட்மென்ட் குறித்து ஓபனாக பேசிய சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை.. என்ன கூறியுள்ளார் பாருங்க

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கதாநாயகி மீனாவின் தங்கையாக நடித்து வருபவர் நடிகை சங்கீதா லியோனிஸ்.இவர் இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளார். நடிகையாக பிரபலமாகி இருக்கும் நடிகை சங்கீதா லியோனிஸ் ஒரு மருத்துவர் ஆவார். இதனை அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். திரையுலகில் உள்ள அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பல நடிகைகள் ஓபனாக பேசியுள்ளனர்.இந்நிலையில், சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் பிரபலமான நடிகை சங்கீதா லியோனிஸ் அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து பேசியுள்ளார்.”மீடியாவில் பெண்கள் என்றாலே வீடு மற்றும் உறவினர்கள் பயப்படுவார்கள். ஆனால், இதில் வந்து திறமையை காட்டி நிரூபித்துவிட்டால் அவர்களை சமாளித்துவிடலாம். சினிமா மற்றும் சின்னத்திரையில் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கிறது என கூறுகிறார்கள். நான் சின்னத்திரை மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறேன். ஆனால், இதுவரை எனக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை, எந்த காலும் வந்ததே இல்லை” என கூறியுள்ளார்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version