சினிமா

அட நம்ம சச்சினுக்கு தமிழில பிடிச்ச படம் இதுவா.? வெளியான பதிவால் ரசிகர்கள் ஷாக்..!

Published

on

அட நம்ம சச்சினுக்கு தமிழில பிடிச்ச படம் இதுவா.? வெளியான பதிவால் ரசிகர்கள் ஷாக்..!

கிரிக்கெட் உலகில் தன்னுடைய நுட்பமான ஆட்டத்தால் அதிகளவான ரசிகர்களை கவர்ந்தவர் சச்சின் டெண்டுல்கர். இவர் மைதானத்தில் மட்டுமல்லாது சமூக வலைத்தளத்திலும் தொடர்ந்து ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பவர் என்பது பலருக்கும் தெரியும்.அண்மையில் பிரபலமான சமூக வலைத்தளமான ரெடிட் தளத்தில், ‘நீங்க திரைப்படங்கள் பார்ப்பீர்களா, அப்படி பார்ப்பீர்கள் என்றால் உங்கள் ஃபேவரிட் எது?’ என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.  இதற்கு சச்சின் அளித்த பதிலும், அவர் குறிப்பிட்ட திரைப்படங்களும் ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது. இந்த கேள்விக்கு பதிலளித்த சச்சின், “நான் எப்போதாவது நேரம் கிடைக்கும் போதெல்லாம் திரைப்படங்கள் பார்ப்பேன். சமீபத்தில் நான் பார்த்த படங்களில் எனக்கு ‘3BHK’ மற்றும் ‘Ata Thambyacha Naay’ என்ற மராத்தி திரைப்படமும் மிகவும் பிடித்திருந்தது.” என தெரிவித்துள்ளார். இந்த கருத்து தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version