சினிமா

அவன் என் கணவரும் இல்ல, காதலரும் இல்ல..! நடிகை ஸ்வேதா வெளியிட்ட அதிரடியான விளக்கம்…

Published

on

அவன் என் கணவரும் இல்ல, காதலரும் இல்ல..! நடிகை ஸ்வேதா வெளியிட்ட அதிரடியான விளக்கம்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சின்ன மருமகள்’ சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை ஸ்வேதா. தனது அழகான தோற்றம், நயமான நடிப்பு மற்றும் உணர்வு பூர்வமான காட்சிகளால், இவர் குறுகிய காலத்திலேயே ரசிகர்களிடம் பிரபலமானவர்.ஆனால் தற்போது, அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆதி என்ற பெயருடைய நபர் ஒருவர், ஒரு பிரபல YouTube சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அதில் அவர், “நடிகை ஸ்வேதா என் காதலி இல்லை, என் மனைவி தான்!” என்று உரிமையுடன் கூறியதுடன், ஸ்வேதாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டார்.இதனால், ரசிகர்கள் மத்தியில் சீரியல் நடிகை ஸ்வேதா பற்றி புதிய தகவல்கள் வெளிவந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி, நெட்டிசன்கள் பலரும் சந்தேகம், ஆதங்கம் மற்றும் விமர்சனங்களுடன் பதிலளிக்கத் தொடங்கினர்.ஆதி கூறிய தகவலோடு சேர்ந்து வெளியான புகைப்படங்களில், ஸ்வேதா மற்றும் ஆதி நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் உள்ளதால், பலரும் உண்மையா? போலியா? என்ற கேள்வியோடு இருந்தனர்.சிலர் இவர்களை வாழ்த்தினர், சிலர் விமர்சித்தனர்.அதைத் தொடர்ந்து, நடிகை ஸ்வேதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கடுமையான பதிலை வெளியிட்டுள்ளார்.ஸ்வேதா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்ட பதிவில், தன்னைக் குறித்து பரப்பப்பட்ட பொய்யான தகவல்களுக்கு கடும் எதிர்வினையை வெளிப்படுத்தினார்.அதில் அவர், “அவன் என் கணவர் கிடையாது, காதலரும் கிடையாது. அவனிடம் பல வழக்குகள் உள்ளன. போலீஸ் தேடிக்கொண்டிருந்த நிலையில்தான் இருக்கிறார். நாங்கள் பிரிந்துவிட்டோம். தற்போது ஒன்றாக இல்ல. இருந்தும் என்னைப் பற்றி பொய்யாக பேட்டி கொடுத்து என் வாழ்க்கையை கெடுக்க முயற்சிக்கிறார். இது தொடர்பாக நான் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போறேன்.” என்று கூறியுள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version