சினிமா
ஆனா என்னோட குவாலிட்டி குறையாது..! சினிமாவுக்கு END கார்ட் போட்ட சமந்தா
ஆனா என்னோட குவாலிட்டி குறையாது..! சினிமாவுக்கு END கார்ட் போட்ட சமந்தா
2010 ஆம் ஆண்டு தமிழில் வெளியான பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. அதற்குப் பிறகு விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடனும் நடித்தார். இவருடைய நடிப்பில் இறுதியாக குஷி படம் வெளியானது. தமிழ் சினிமாவில் நடிகை சமந்தாவுக்கு தனி மார்க்கெட் காணப்பட்டது. ஆனாலும் இவருக்கு திடீரென ஏற்பட்ட மயோசிடிஸ் நோய் இவருடைய வாழ்க்கையை மாற்றியது. இதனால் சினிமாவிலும் வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. இந்த நிலையில், நடிகை சமந்தா அளித்த பேட்டியொன்று தற்போது வைரலாகி வருகின்றது. அதில், இனி அதிக படங்களில் நடிக்க மாட்டேன். ஆனா மிகவும் கவனமாக படங்களை தேர்ந்தெடுப்பேன் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், சினிமா மற்றும் உடற்பயிற்சி இரண்டுமே எனக்கு ரொம்பவும் பிடிச்சது. இதில் இனி உற்சாகம் தரக்கூடியதை மட்டுமே செய்வேன் என்ற புள்ளிக்கு வந்துவிட்டேன். கடந்த காலங்களில் பல படங்களில் நடித்தேன். ஆனா உண்மைய சொல்லணும் என்றால் அதுல ஒரு சில படங்கள் மட்டும் எனக்கு திருப்தி அளிக்கவே இல்லை. ஆனாலும் நான் நடித்தேன்.இனிமேல் ஒரு நாளைக்கு ஐந்து படங்களுக்கான படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள மாட்டேன். என்னுடைய உடல் சொல்வதைக் கேட்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.இப்போ எனது வேலைகளை குறைத்தேன். இனி நான் செய்யும் வேலைகளில் முழு ஈடுபாட்டுடன் செய்யவும் முடிவெடுத்துள்ளேன். இதனால் படங்களின் எண்ணிக்கை குறையலாமே தவிர அதன் குவாலிட்டி குறையவே குறையாது. இனி மிகவும் நேர்த்தி உடன் படங்களை தெரிவு செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.