டி.வி

ஆரம்பிக்கலாமா? BIGGBOSS 9 சீசனின் முதல் போட்டியாளர் இவரா? கசிந்த தகவல்

Published

on

ஆரம்பிக்கலாமா? BIGGBOSS 9 சீசனின் முதல் போட்டியாளர் இவரா? கசிந்த தகவல்

சின்னத்திரையில்  ரியாலிட்டி ஷோக்கள், பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு தனது காமெடி டயலாக் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் மதுரை முத்து.  இவர் திருமண நிகழ்வுகள், பொது நிகழ்ச்சிகளிலும் கூட கலந்து கொண்டு தனது பேச்சுத் திறமையை வெளிக்காட்டி வருகின்றார். சமூக ஆர்வலரான இவர், தன்னால் முடிந்த உதவிகளை பல ஏழை எளிய மக்களுக்கும் செய்து கொண்டிருக்கின்றார்.  அவர் செய்யும் நல்ல செயல்களை வீடியோவாக வெளியிட்டு பலருக்கும் உதாரணமாக காணப்படுவதோடு பலருடைய பாராட்டையும் பெறுவார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை முத்துவின் சொந்த கிராமத்தில்  மறைந்த அப்பா, அம்மா மற்றும் முதல் மனைவிக்கு ஒரு கோயில் ஒன்றையும் கட்டியுள்ளார்.  இது தொடர்பான வீடியோவையும் மதுரை முத்து வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் மதுரை முத்து கலந்து கொள்ளுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது . ஆனாலும் இது தொடர்பில் உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை.இன்னும் ஒரு சில வாரங்களில்  பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் ஆரம்பிக்கப்பட இருக்கும் நிலையில்  இதில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் பற்றிய விபரம் தற்போது வெளியாகிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version