இந்தியா

இந்தியாவில் உணவில் கஞ்சா கலந்து விற்பனை – மூவர் கைது

Published

on

இந்தியாவில் உணவில் கஞ்சா கலந்து விற்பனை – மூவர் கைது

உத்தரப் பிரதேசத் தலைநகரான லக்னோவில் உள்ள தெருவோரக் கடையில் நொறுக்குத்தீனிகளில் கஞ்சா கலந்து விற்ற குற்றத்திற்காக மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

மோகன்லால் கஞ்ச் புறநகர்ப் பகுதியில் 42 வயது பிரமோத் சாஹு என்பவர் உருளைக்கிழங்கு வறுவல், பொறித்த முட்டைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வந்தார்.அவற்றிற்கு அங்கு நல்ல வரவேற்பு இருந்தது.

Advertisement

நொறுக்குத்தீனிகளில் போதைப்பொருளான கஞ்சாவைத் தடவி அவர் விற்றது அம்பலமானது. அதுமட்டுமன்றி, கஞ்சாவை அம்மூவரும் பொட்டலங்களாகவும் விற்று வந்ததாகக் கூறப்பட்டது. 

இதுபற்றி தகவல் அறிந்த லக்னோ காவல்துறையினர் சாஹுவை கைது செய்தனர்.

இதேபோன்று, ரயில்வே நிலையம், பேருந்து நிலையம், டாக்சி நிறுத்தம், பள்ளி, கல்லூரி போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கஞ்சா விற்ற குற்றச்சாட்டின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version