தொழில்நுட்பம்
இன்ஸ்டகிராமில் மூன்று புதிய அப்டேட்களை வெளியிட்ட மெட்டா
இன்ஸ்டகிராமில் மூன்று புதிய அப்டேட்களை வெளியிட்ட மெட்டா
சமூக வலைத்தளங்களில் பயன்படுத்துபவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் செயலியாக இன்ஸ்டகிராம் உள்ளது. உலகம் முழுவதும் சுமார் 2 பில்லியன் பேர் இன்ஸ்டாகிரம் பயன்படுத்துகிறார்கள்.
ஆரம்பத்தில் புகைப்படம் மட்டுமே பதிவிடும் செயலியாக இருந்த இன்ஸ்டா தனது பயனர்களை கவருவதற்காக புது புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ரீல்ஸ்கள், லைவ் சாட்கள் என பல்வேறு வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது புதிதாக மூன்று அப்டேட்களை இன்ஸ்டகிராம் கொண்டு வந்துள்ளது.
அதாவது எக்ஸ் தளத்தில் இருப்பது போல ரீல்ஸ்களை ரீபோஸ்ட் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
அதேபோல, பயனர்களுக்கு இடையே தொடர்புகளை மேம்படுத்தும் விதமாக இண்டரக்டிவ் மேப், பிரண்ட்ஷிப் டேப் ஆகிய வசதிகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த புதிய அப்டேட்கள் பயனர்கள் வெகுவாக கவர்ந்தாலும் , தனியுரிமையை பாதிக்கும் வகையில் மேப் வசதி உள்ளிட்டவை இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்தும் வருகிறார்கள்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை