உலகம்

இஸ்ரேல் தலைநகரில் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

Published

on

இஸ்ரேல் தலைநகரில் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

காசாவில் நேதன்யாகு அரசு நடத்தி வரும் இனப்படுகொலையை எதிர்த்து தலைநகர் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது “எங்கள் ஆன்மாவையும் இரத்தத்தையும் கொண்டு காசாவை காப்பாற்றுவோம்” என்று அவர்கள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

சட்டவிரோதமான மற்றும் தூண்டும் வகையில் கருத்துக்களை தெரிவித்ததற்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேலிய போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் எட்டு பேர் பட்டினியால் இறந்துள்ளனர். இதனால் ஒரு சில வாரங்களில் உணவு பற்றாக்குறையால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 281 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 115 பேர் குழந்தைகள்.

ஐ.நா உட்பட பிற உணவு விநியோக முறைகளை முற்றிலுமாக துண்டித்து, அதன் சொந்த நான்கு மையங்களைத் இஸ்ரேல் திறந்தது. இந்த மையத்தை நோக்கி உணவுக்காக வந்த 2,076 பேரை இராணுவம் இதுவரை சுட்டுக் கொன்றுள்ளது.

Advertisement

நேற்று காசா முழுவதும் நடந்த தாக்குதல்களில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் உணவுக்காக காத்திருந்த 22 பேர் அடங்குவர்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version