இந்தியா

உத்தரகண்டில் மீண்டும் சிவப்பு எச்சரிக்கை!!

Published

on

உத்தரகண்டில் மீண்டும் சிவப்பு எச்சரிக்கை!!

உத்தரகண்டில், இவ்வாரம் முழுவதும் அடைமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பல்வேறு மாவட்டங்களுக்கு, சிவப்பு, செம்மஞ்சள் மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

உத்தரகண்டின் டெஹ்ராடூன், தெஹ்ரி, பௌரி, ஹரித்வார், உத்தம் சிங் நகர், நைனிடல் மற்றும் பாகேஷ்வர் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் அடைமழை முதல் அதிகமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதால், மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கையுடன் இருக்குமாறு உத்தரகண்ட் மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

இந்நிலையில், தாழ்வான பகுதிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள், தேவைப்பட்டால் அங்கிருந்து வெளியேறுவதற்குத் தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாவட்ட நிர்வாகம் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிப்பதற்கு அரசு ஆலோசனை வழங்கிய நிலையில், அம்மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டுமானப் பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ளம் ஏற்படும் அபாயம் மிகுந்த பகுதிகளில் இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகள் தயார்நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்த ஆக.5 ஆம் திகதி உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பால் திடீரென வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான குடியிருப்புகள் அடித்துச் செல்லப்பட்டன. இத்துடன், அங்கு இடிபாடுகளுக்குள் சிக்கி மாயமான 66 பேரை தேடும் பணிகள் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version