உலகம்
கடலில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சீன ராணுவ கப்பல்கள்!
கடலில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சீன ராணுவ கப்பல்கள்!
தென் சீனக் கடலில் ஸ்கார்பாரோ ஷோல் பகுதியில் திங்களன்று பிலிப்பைன்ஸ் ரோந்துப் படகைத் துரத்தும் போது சீன கடற்படை மற்றும் சீன கடலோர காவல்படை கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதில் ஏற்பட்ட பலத்த சேதத்தால் சீனாவுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் வீடியோ காட்சிகளை பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை வெளியிட்டுள்ளது.பிலிப்பைன்ஸ் மீனவர்களுக்கு உதவுவதற்காக தங்கள் படகு மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், அந்த நேரத்தில் தங்களை துரத்தி வந்த இரண்டு சீன கப்பல்களும் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டதாகவும் பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.
தென் சீனக் கடலில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், சர்ச்சைக்குரிய ஸ்கார்பரோ ஷோல் அருகே மோதல் பகுதி முற்றிலுமாக உடைந்துள்ளது.
கப்பல்கள் மோதிக்கொண்டது குறித்து சீனா கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.இருப்பினும்,சட்டத்தின்படி,தென் சீனக் கடலில் தங்கள் எல்லையை கண்காணித்து வருவதாகவும், பிலிப்பைன்ஸ் கப்பல்கள் எல்லைக்குள் நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும்
தென் சீனக் கடல் உலகின் மிகவும் பரபரப்பான கடல் பாதையாகும்.இதன் மூலம் 60% க்கும் அதிகமான வர்த்தகம் நடைபெறுகிறது. அதில் ஸ்கார்பாரோ ஷோல் என்பது 2012 ஆம் ஆண்டு சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதி.
அப்போதிருந்து அது தொடர்ந்து சர்ச்சைக்குரிய இடமாக இருந்து வருகிறது.[ஒ]