இலங்கை

கிளிநொச்சி வைத்தியசாலையில் உள்ள பெண் நோயியல் மருத்துவமனையை இயக்க நடவடிக்கை!

Published

on

கிளிநொச்சி வைத்தியசாலையில் உள்ள பெண் நோயியல் மருத்துவமனையை இயக்க நடவடிக்கை!

நெதர்லாந்து அரசின் நிதி உதவியில் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண பெண் நோயியல் மருத்துவமனையை படிப்படியாக எவ்வளவு விரைவாக இயக்க முடியுமோ அவ்வளவு விரைவாக இயக்குவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும், இதற்குத் தேவையான ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். 

 மருத்துவமனையின் செயற்பாடுகளை இயக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை மாலை (25) நடைபெற்றது. 

Advertisement

 கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், மேற்படி மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டு இன்னமும் செயற்படாத நிலையில் அங்குள்ள உபகரணங்கள் வேறு மாகாணங்களுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக வதந்திகள் பரப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

 அவ்வாறான எந்தவொரு நகர்வும் முன்னெடுக்கப்படாத நிலையில் இவ்வாறான கதைகள் பரப்பப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.

நெதர்லாந்து அரசின் நிதி உதவியில் வடக்கில் அமைக்கப்பட்ட 4 மருத்துவமனைகளில் மாங்குளம் மருத்துவமனைக்கு மாத்திரம் ஆளணிக்குரிய அனுமதி கிடைக்கப்பெற்றதாகவும், ஏனைய மூன்று மருத்துவமனைகளுக்கும் ஆளணி அனுமதி இன்னமும் கிடைக்கவில்லை என ஆளுநர் குறிப்பிட்டார்.

Advertisement

 ஆளணி அனுமதி கிடைக்காத போதும் இருக்கின்ற வளங்களை வைத்துக்கொண்டு பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் திறக்கப்பட்ட மருத்துவ அலகு சிறப்பாக இயங்குவதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார். அந்த மருத்துவ அலகு சிறப்பாக இயங்குவதற்குத் தேவையான ஒத்துழைப்புக்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது எனவும் குறிப்பிட்டார்.

 அதேபோல கிளிநொச்சி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண பெண் நோயியல் மருத்துவமனையையும் இயக்கத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஆளுநர், அங்குள்ள மனிதவளப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

 இதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமன் பத்திரண, கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல, கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையின் பணிப்பாளர் பிரபாத், மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

Advertisement

ஆளணி பற்றாக்குறையுடன் இயங்குவதிலுள்ள சிரமங்கள் மற்றும் எவ்வாறு படிப்படியாக இதனை இயங்கச் செய்ய முடியும் என்பது தொடர்பில் தமது நிலைப்பாடுகளைத் தெரிவித்தனர். 

 இறுதியாக கருத்துத் தெரிவித்த ஆளுநர், எவ்வளவு விரைவாக இயக்க முடியுமோ அவ்வளவு விரைவாக இயக்க வேண்டும் என்று பணித்ததுடன், படிப்படியாக இயக்குவதற்குத் தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

 இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடாதிபதி, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைப் பணிப்பாளர், மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையின் நோயாளர் நலன்புரி சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version