உலகம்

கென்யாவில் விமான விபத்து!

Published

on

கென்யாவில் விமான விபத்து!

கென்யா, நைரோபியில் உள்ள வில்சன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட AMREF Flying Doctors நிறுவனத்திற்கு சொந்தமான மருத்துவ விமானம் ஒன்று (Air Ambulance), சோமாலிலாந்து செல்லும் வழியில் நைரோபிக்கு அருகிலுள்ள ம்விஹோகோ என்ற குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது. 

நேற்றிரவு  இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த நான்கு பேர் தரையில் இருந்த இரண்டு பேர் என மொத்தம் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்,இருவர் காயமடைந்துள்ளனர். 

விமானம் புறப்பட்ட மூன்று நிமிடங்களில் தொடர்பை இழந்ததாக கென்யா சிவில் ஏவியேஷன் ஆணையம் தெரிவித்துள்ளது. 

விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version