டி.வி

க்ரிஷிக்கு ரோகிணி கொடுத்த தண்டனை.! பரபரப்பான திருப்பங்களுடன் புதிய ப்ரோமோ

Published

on

க்ரிஷிக்கு ரோகிணி கொடுத்த தண்டனை.! பரபரப்பான திருப்பங்களுடன் புதிய ப்ரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்கள் மத்தியில் தனித்துவமிக்கதாக காணப்படுகின்றன. அந்த வகையில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான புதிய கதைக் களத்துடன் சீரியல்களின் ப்ரோமோக்கள் வெளியாகி உள்ளன.இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.அதில் ரோகிணி க்ரிஷை புதிய ஸ்கூல் ஒன்றில் சேர்க்கின்றார். அங்கு ஹாஸ்டலிலும் சேர்த்து விடுகின்றார். ஆனாலும் க்ரிஷ், ‘நான் உன்னுடனே வந்து விடுகிறேன்’ என்று ரோகிணியிடம் கெஞ்சுகின்றார். ஆனாலும் ரோகிணி க்ரிஷை  ஹாஸ்டலில் சேர்த்து விடுகிறார். இன்னொரு பக்கம் மீனா முத்துவிடம், ‘என்ன நடக்குது என்று எனக்கு தெரியவில்லை. முதலில் க்ரிஷின்  அம்மா அவரை வேறு பாடசாலைக்கு மாற்றிவிட்டார்.. இப்போ வீடும் பூட்டி இருக்குது.. என்ன நடக்குது என்று தெரியவில்லை..’ என இருவரும் காருக்குள் பேசிக்கொண்டு வருகின்றார்கள்.அவர்கள் இருவரும் வரும் வழியில் திடீரென ரோகிணியின் அம்மாவை கண்டு விடுகின்றார்கள். இதனால் மீனா அவரிடம், ‘இப்போ உங்களுடைய பொண்ணும் பேரனும் எங்கே இருக்கிறாங்க? என்று கேட்கிறார். இதனால் ரோகிணியின் அம்மா செய்வது அறியாமல் திக்கு திணறி காணப்படுகின்றார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ. எனவே இனிவரும் எபிசோடுகளில் ரோகிணி வசமாக சிக்குவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version