டி.வி

சன் டிவியின் Top Cooku Dupe Cooku போட்டியாளர்கள் இவர்களா?.. லீக்கான லிஸ்ட் இதோ

Published

on

சன் டிவியின் Top Cooku Dupe Cooku போட்டியாளர்கள் இவர்களா?.. லீக்கான லிஸ்ட் இதோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. முதல் சீசன் வெற்றியடைய அடுத்தடுத்த சீசன் ஒளிபரப்பாக இப்போது குக் வித் கோமாளி 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.முதல் 4 சீசன்களில் எந்த ஒரு மாற்றமும் இல்லை, ஆனால் 5வது சீசனில் நிகழ்ச்சியில் பெரிய மாற்றம் நடந்தது.நடுவர், கோமாளி, தயாரிப்பு நிறுவனம் என நிறைய மாற்றம் ஏற்பட்டது. அப்படி ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.அவர் குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறி சன் டிவியில் புதியதாக தொடங்கப்பட்ட டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் நடுவராக கலக்கினார்.முதல் சீசன் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் சமீபத்தில் 2வது சீசனின் புரொமோ வெளியானது.அதில், டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் கோமாளிகள் யார் யார் என்று வெளியானது. பெசன்ட் ரவி, ரோபோ ஷங்கர், நடிகை கிரண், நடிகை பிரியங்கா, சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version