சினிமா

சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் இசை வெளியீட்டு விழா அறிவிப்பு

Published

on

சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் இசை வெளியீட்டு விழா அறிவிப்பு

பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

மேலும் படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த படம் கஜினி படம் போன்ற திரை கதையையும் துப்பாக்கி படத்தின் ஆக்சனையும் சேர்த்து கதைக்களமாக கொண்டு படமாக்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குனர் ஏ.ஆர். முருதாஸ் கூறியிருந்தார். இதனால் இந்த படம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சில வாரங்களுக்கு முன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான சலமபல பாடல் வெளியாகி வைரலானது.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version