இந்தியா
டெல்லியில் தீ விபத்து!
டெல்லியில் தீ விபத்து!
டெல்லியில் எலெக்ட்ரானிக்ஸ் கடையில் ஏற்பட்டதீ விபத்தில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேற்கு டெல்லியில் உள்ள ராஜா கார்டன் பகுதியில், மகாஜன் எலெக்ட்ரானிக்ஸ் ஷோரூமில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த நான்கு பேரும் கடைக்குள் சிக்கியிருந்ததாகவும், தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்டெடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், ஆனால் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐந்து தீயணைப்பு வாகனங்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தன. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட லோகேஷ் டகர் என்ற தீயணைப்பு வீரரும் காயமடைந்ததாகவும்.
முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.[ஒ]