பொழுதுபோக்கு

தனுஷ்க்கு ரொம்ப பிடிக்கும்; நெப்போலியன் வீட்டுக்கு விசிட் அடித்த பிரபலம்: லேட்டஸ்ட் வீடியோ!

Published

on

தனுஷ்க்கு ரொம்ப பிடிக்கும்; நெப்போலியன் வீட்டுக்கு விசிட் அடித்த பிரபலம்: லேட்டஸ்ட் வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகர் நெப்போலியன் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட நிலையில், இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் பிரபலங்கள் பலரையும் சந்தித்து வருகிறார், அந்த வகையில் பிரபல நடிகரும்,யூடியூப்பருமான விக்கல்ஸ் விக்ரமை குடும்பத்துடன் நேரில் சந்தித்து அவரது ஷோவையும் ரசித்துள்ளார்.பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நெப்போலியன். 90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், படங்களில் பாடகராகவும் தன்னை நிரூபித்துள்ளார். அரசியலில் திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்ட எம்.பி.யாக இருந்த நெப்போலியன், மத்திய அமைச்சராகவும் பதவியில் இருந்துள்ளார்.ஜெயசுதா என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகர் நெப்போலியனுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் அவரது மூத்த மகன் தனுஷ் சிறுயதிலேயே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில, அவரின் சிகிச்சைக்காக நெப்போலியன், தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். சமீபத்தில் தனது மூத்த மகன் தனுஷ்க்கு ஜப்பானில் திருமணம் நடத்தினார் நெப்போலியன். இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவியது.மேலும், தனுஷ் குறித்து அவதூறு பரப்பும் வகையிலான வீடியோக்களும் இணையத்தில் வெளியானது. இது குறித்து நெப்போலியன் நெல்லை காவல் நிலையத்தில் புகார் அளித்தை தொடர்ந்து, வீடியோவை நீக்கினர். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது மகன் தனுஷ் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடிய நெப்போலியன் தனது மகன் தனுஷ்க்கு 2-வது முறையாக அமெரிக்காவில் திருமண ரிஷப்ஷன் நடத்தி அசத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டிருந்தார்.A post shared by Nepoleon Duraisamy (@nepoleon_duraisamy)இதனிடையே தற்போது, ஸ்டாண்ட்அப் காமெடியன் பிரபல யூடியூப்பரும், தோனி தயாரித்த எல்.ஜி.எம். படத்தில் நடித்தவருமான விக்கல்ஸ் விக்ரம், தனது ஷோவுக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவரது ஷோவை காண தனது மகன் தனுஷ் உட்பட குடும்பத்துடன் சென்ற, நெப்போலியன் அவரை சந்தித்து தனது மகனுக்கும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும் மகன் தனுஷ்க்கு விக்கல்ஸ் விக்ரமை மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார், அதன்பிறகு குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படங்கள் நெப்போலியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.A post shared by Nepoleon Duraisamy (@nepoleon_duraisamy)தொடர்ந்து இன்று, நெப்போலியன் வீட்டுக்கு விசிட் அடித்த விக்கல்ஸ் விக்ரம், தனுஷை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இது குறித்து நெப்போலியன் நெகிழ்ச்சியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version