பொழுதுபோக்கு

தப்பான அட்வைஸ் கொடுத்த அப்பா; அவர் பேச்சை கேட்காத காரணம் இதுதான்; உண்மை உடைத்த வனிதா!

Published

on

தப்பான அட்வைஸ் கொடுத்த அப்பா; அவர் பேச்சை கேட்காத காரணம் இதுதான்; உண்மை உடைத்த வனிதா!

பழம்பெரும் நடிகர் விஜயகுமார், முத்து கண்ணு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் தன்னுடன் படங்களில் நடித்த நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் முதல் மனைவி மூலம் விஜயகுமாருக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளார். விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதிகளுக்கு அனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என மூன்று மகள்கள் உள்ளனர். இதில் வனிதா குடும்பத்தைவிட்டு பிரிந்து தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார்.வனிதா விஜயகுமார் அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது தந்தை கொடுத்த ஒரு பேட்டியைப் பார்த்த போது, அவர் சகோதரிகள் கவிதா மற்றும் அனிதாவின் பெயர்களை மட்டும் குறிப்பிட்ந்துவிட்டு, தன்னுடைய பெயரை சொல்லவில்லை என்பதைக் கூறினார்.இது குறித்து பேசிய அவர், “வனிதா மட்டும் தான் என் பேச்சை கேட்க மாட்டாள்” என்று அப்பா நேராக சொன்னிருந்தால், நானே ஆமாம் என்று கூறியிருப்பேன் ஏனெனில், தந்தையின் பேச்சை கேட்கவில்லை என்பதும் தனக்கே நன்றாக தெரியும் என்றார்.”ஆனால், ஒரு தப்பான விஷயத்திற்கு அட்வைஸ் கொடுத்தா அதை நான் கேட்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அவருக்கு எது சரி என்று படுகிறதோ அது அவருக்கு சரியானது. ஆனால், எனக்கு தவறாக தெரியும் விஷயத்தை அவர் எப்படி எனக்கு அட்வைசாக கொடுத்தால் அதை நான் ஏன் கேட்க வேண்டும்.அவர் பேசிய விஷயத்தை பலர் எனக்கு வீடியோவாக எடுத்து அனுப்பி இருந்தார்கள். ஒரு குடும்பத்தில் ஒருவர் இறந்து போய்விட்டால் கூட, அவர் பற்றி நாம கண்டிப்பா பேசுவோம். ஆனால், என் பெயரை அவர் சொல்லவே இல்லை. அப்படி சொல்லவில்லை என்றால், நான் அவரின் மகள் இல்லையா, அவர் யாரை ஏமாற்ற பார்க்கிறார். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்.” என்று பேசி இருந்தார்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பிஸ்னஸ் மற்றும் சினிமா என தொடர்ந்து படத்தில் நடித்து வருகிறார் வனிதா விஜயகுமார். நடிகையாக இருந்த வனிதா ‘மிஸ்சஸ் & மிஸ்டர்’ படத்தை இயக்கி இயக்குநராக மாறி உள்ளார். இந்த படத்தில் ராபர்ட் மாஸ்டர் வனிதாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version