இந்தியா
திருப்பதியில் ரம்மியமாக கொட்டும் நீர்வீழ்ச்சிகள்!
திருப்பதியில் ரம்மியமாக கொட்டும் நீர்வீழ்ச்சிகள்!
ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் திருப்பதி மலையில் கபில தீர்த்தம் மற்றும் பல்வேறு இடங்களில் திடீரென நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளன. இவற்றில் இருந்து பொங்கும் பால் நுரையுடன் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
தொடர் மழையின் காரணமாக திருப்பதி மலை முழுவதும் பச்சை பட்டு போர்த்தியது போல் பச்சை பசேல் என ரம்யமாக காட்சி அளிக்கிறது.
தரிசனத்திற்கு பஸ், கார், வான்களில் செல்லும் பக்தர்கள் மற்றும் நடைபாதையில் செல்லும் பக்தர்கள் நீர்வீழ்ச்சி மற்றும் பச்சை பசேல் என காட்சி அளிக்கும் மலைகளை ரசித்தபடி செல்கின்றனர். நீர்வீழ்ச்சிகளில் செல்பி எடுத்தும் மகிழ்கின்றனர்.
கடும் குளிர், குளிர்ந்த காற்று வீசுவதால் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் அவதியடைந்துள்ளனர்.
திருப்பதியில் நேற்று 75,740 பேர் தரிசனம் செய்தனர்.34,958 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.84 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.[ஒ]