விளையாட்டு
தேசிய பிக்கிள் பால் போட்டி; வீரர்களுடன் விளையாடிய கோவை மாவட்ட ஆட்சியர்: வீடியோ
தேசிய பிக்கிள் பால் போட்டி; வீரர்களுடன் விளையாடிய கோவை மாவட்ட ஆட்சியர்: வீடியோ
கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான பிக்கிள் பால் போட்டியில் தமிழகம்,கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 300″க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். கோவையின் முதல் பிக்கிள் பால் அணியான ‘கோயம்புத்தூர் சூப்பர் ஸ்மாஷர்ஸ்’ சார்பில் தேசிய அளவிலான பிக்கிள் பால் ஓபன் போட்டி நடைபெற்றது.கோவையில் முதன்முறையாக நடைபெற்ற இதில் தமிழகம்,கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் வயது அடிப்படையில் ஒற்றை பிரிவு மற்றும் இரட்டை பிரிவு என இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.இதில் வெற்றி பெரும் வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்குவதோடு பிக்கிள் பால் விளையாட்டில் உலக தரவரிசை பட்டியலில் இடம் பெறுகின்றனர். முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கலந்து கொண்டு கோயம்புத்தூரின் பிக்கிள் பால் புதிய அணியை அறிமுகபடுத்தி விளையாட்டை துவக்கி வைத்து அவரும் வீரர்களுடன் பிக்கிள் பால் விளையாடி அசத்தினார்.பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.