விளையாட்டு
தேசிய விளையாட்டு தினம்: கோவை ஆதரவற்றோர் இல்லத்தில் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த கமிஷ்னர்!
தேசிய விளையாட்டு தினம்: கோவை ஆதரவற்றோர் இல்லத்தில் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த கமிஷ்னர்!
ஆதரவற்ற குழந்தைகளுக்காக நடைபெறும் விளையாட்டு போட்டியை கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் சில்டரன் சாரிடபுள் ட்ரஸ்ட் இணைந்து, கோவையில் உள்ள ஆதரவற்ற இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளை நடத்துகின்றனர். கோவைப்புதூர் ஆஸ்ரம் மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் நடக்கும் இப்போட்டிகளை, கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி கொடியசைத்து துவக்கி வைத்து சிறப்பித்தார். தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்ற குழந்தைகளை வாழ்த்தி பாராட்டினார். கோவையில் உள்ள 20″க்கும் மேற்பட்ட ஆதரவற்ற இல்லங்களை சார்ந்த 400க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பங்கேற்றிருக்கின்றனர். கபடி, கொக்கோ, கேரம், செஸ், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட தடகள போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் வெற்றி பெரும் குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்குகின்றனர். இல்லங்களில் வசிக்கும் குழந்தைகளின் விளையாட்டு திறனை மேம்படுத்தவும், அவர்களின் திறனை மெருகேற்றவும் இந்த போட்டிகளை நடத்துகின்றனர். இல்லங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கான பிரத்யேக விளையாட்டி போட்டிகளை நடத்துவதுவதன் மூலம் குழந்தைகள் புத்துணர்வு பெறுவார்கள் என நம்புவதாகவும், திறமையான குழந்தைகளை அடுத்த கட்டத்துக்கும் கொண்டு செல்ல இருப்பதாகவும், குழந்தைகளின் விளையாட்டு திறனை மேம்படுத்த வருங்காலங்களில் உரிய பயிற்சி அளிக்க திட்டமிட்டிரு பதாகவும், சில்டர்ன் சாரிடபுள் ட்ரஸ்ட்டினை சார்ந்த விளையாட்டு போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.இந்த விளையாட்டு போட்டி துவக்க நிகழ்வில், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹக்ஷா, சில்ட்ரன் சாரிடபுள் ட்ரஸ்டின் ஒருங்கிணைப்பாளர் பாலா, டாக்டர் சி. தேவேந்திரன், தன்னார்வகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.