இலங்கை

பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளரின் அதிரடியான செயற்பாடு!

Published

on

பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளரின் அதிரடியான செயற்பாடு!

பச்சிலைப்பள்ளி பிரதேசசபை எல்லைக்குட்பட்ட சோரன்பற்று கிராமத்தில் நீண்ட காலமாக வெள்ள அனர்த்தநிலை காணப்படுவதாக அறிந்த தவிசாளர் அதற்கான தீர்வினை உடனடியாக பெற்று கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது; ஒவ்வொரு முறையும் வெள்ள அனர்த்தங்களின் போது சோரன்பற்று கிராமத்தில் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். குறித்த வெள்ள அனர்த்த நிலைமைகளின் போது மட்டுமே அதிகாரிகள் வருகை தந்து குறித்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதாகவும் பின்னர் அவற்றை கைவிட்டு சென்று விடுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

Advertisement

இதனால் தாம் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதாக கிராம மட்ட அமைப்புக்கள் பச்சிலைபள்ளி பிரதேச சபையினுடைய தவிசாளர் சுப்ரமணியம் சுரேனிடம் தெரிவித்ததை தொடர்ந்து இதற்கான தீர்வினை கால அவகாசம் இல்லாமல் தவிசாளர் உடனடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.

அடுத்த அனர்த்த முன்னாயத்த நிலைமைகளை கருத்தில் கொண்டு குறித்த பிரதேசத்தில் இருந்து வெள்ளம் வடிந்து ஓடக்கூடிய இடத்தை அடையாளப்படுத்தி அமைப்புகளுடன் சேர்ந்து பிரதேச சபை வடிகால் அமைப்பு வசதியை மேற்கொண்டார்.

இவ்விடயங்களை தவிசாளர் சுப்ரமணியம் சுரேன் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.  அவருடன் சபையின் உபதவிசாளர் சிவகுரு செல்வராஜா மற்றும் கிராமமட்ட அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் என்ன பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version