பொழுதுபோக்கு

படுத்தா வைப்ரேஷன் ஆகும், மசாஜ் பண்ணும்; சூடு, கூலிங் இரண்டுமே கிடைக்கு சூப்பர் பெட்: ரம்பா பெட் டூர்!

Published

on

படுத்தா வைப்ரேஷன் ஆகும், மசாஜ் பண்ணும்; சூடு, கூலிங் இரண்டுமே கிடைக்கு சூப்பர் பெட்: ரம்பா பெட் டூர்!

தமிழ் சினிமாவில் 90-களில் கனவுக்கன்னியாக இருந்த நடிகை ரம்பா தற்போது பீஸினஸ்வுமனாக உருவெடுத்துள்ள நிலையில், டான்ஸ் மாஸ்டர் கலாவுக்கு தனது பிஸினஸ் தொடர்பாக எடுத்து கூறிய வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.தெலுங்கில் நடிகையாக அறிமுகமான ரம்பா 1993-ம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியாக உழவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு, 1996-ம் ஆண்டு வெளியான உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் ஹீரோயினாக மாறிய ரம்பா, அடுத்து அர்ஜூன், விஜய், அஜித், பிரஷாந்த், விஜயகாந்த், ரஜினிகாந்த், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார்.கடந்த 2010-ம் ஆண்டு இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரம்பாவுக்கு தற்போது 3 பிள்ளைகள் உள்ள நிலையில், வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட அவர், தற்போது மீண்டும் இந்திய திரும்பி பிஸினஸ் வுமனாக மாறியுள்ளார். இதனிடையே பிகைண்வுட்ஸ் சேனலில் வெளியாகியுள்ள ஒரு வீடியோவில் ரம்பா, கலா மாஸ்டருக்கு தனது ஆபிஸை சுற்றிக்காட்டிய சுற்றிக்காட்டியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.வீடியோவில், அந்த வீடியோவில், ரம்பா சென்னை அண்ணா நகரில் மேஜிக் ஹோம் என்று ஒரு கம்பெனி வைத்துள்ளார். அவரது அலுவலகத்தில் கிச்சன்களை எப்படி எல்லாம் வடிவமைக்கலாம், கிச்சனில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிங்க், பைப்புகள் உள்ளிட்ட வடிவமைப்புகள்  பற்றி கூறியுள்ளார். எவ்வளவு பட்ஜெட்டாக இருந்தாலும், அதிகபட்சம் 45 நாட்களுக்குள்ளாகவே முடித்து விடலாம் என்றும் கூறியுள்ளார்.அதேபோல விதவிதமான அலமாரிகள், உடல்வலி தெரியாமல் இருக்க மசாஜ் பெட்டுகள் போன்றவையும் அந்த அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக இந்த மசாஜ் பெட்டில் படுத்தால், வைபிரேஷன் ஆவது போன்று இருக்கும். உடல் வலி எதுவும் வராது. அதே சமயம், பெட் சூடாக இருக்க வேண்டும் என்றாலும், கூலாக இருக்க வேண்டும் என்றாலும் மாற்றிக்கொள்ளலாம். அந்த வசதிகள் இருக்கிறது என்று கூறியுள்ளதார். இந்த பெட்டில் படுத்த கலா மாஸ்டர் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளார்.ரம்பாவின் கம்பெனி பெங்களூர், கனடா, சிக்காகோவில் உள்ளதாகவும் அடுத்து ஸ்ரீலங்காவில் ஆரம்பிக்க உள்ளதாகவும் கூறியுள்ள ரம்பா, தனது கணவர் இந்திரன் பள்ளி ஒன்றை கட்டி வருவதாகவும் அதற்காக 36 ஏக்கர் நிலத்திற்காக ஒரு தெருவையே வாங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version