உலகம்

பாகிஸ்தானுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை!

Published

on

பாகிஸ்தானுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை!

பாகிஸ்தானில் வெள்ள அபாயம் ஏற்படவுள்ளதாக இந்திய வானிநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய மத்திய அரசின் உத்தரவின் பிரகாம் பாகிஸ்தான் அரசுக்கு உத்தியோகபூர்வமாக வெள்ள அபாய அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் மழையினால் சிந்து நதியையும் அதனை சூழவுள்ள நதிகளிலும் நீர்மட்டம் உயர்வடைந்து வருகின்றதன் காரணமாக பாகிஸ்தானுக்கு, இந்தியா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் 1960 ஆம் ஆண்டு சிந்துநதி நீர் ஒப்பந்தம் ஒன்றை செய்த பின்னர் வெள்ள அபாய அறிவிப்புகளை இரு நாடுகளும் பாரிமாறியிருந்தன. ஆனால் காஸ்மீர் பல்ஹாம் பூங்காவில் சுற்றுலா பணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் இந்த ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டது.

இதன் பின்னர் நீர் பாதுகாப்பு மற்றும் நதிகள் ஏரிகள் பாதுகாப்பு குறித்து விடயங்களிலும் மற்றும் வெள்ள அபாய அறிவிப்பு உள்ளிட்ட பல பணிகளை இந்திய மத்திய அரசு நிறுத்தியிருந்தது. ஆனாலும் பாகிஸ்தானை அண்மித்த பகுதிகளில் உள்ள நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படவுள்ளதை அறிந்து அபாய எச்சரிக்கையை பாக்கிஸ்தான் அரசுக்கு, மத்திய அரசு வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version