டி.வி

பொத்தி பொத்தி பாதுகாத்த பிக்பாஸ் சீசன் 9 லிஸ்ட்!! லீக்கான போட்டியாளர்கள் பெயர்…

Published

on

பொத்தி பொத்தி பாதுகாத்த பிக்பாஸ் சீசன் 9 லிஸ்ட்!! லீக்கான போட்டியாளர்கள் பெயர்…

விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 சீசன்களாக மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் சீசன் முதல் 7வது சீசன் வரை கமல் ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வந்த இந்நிகழ்ச்சியின் 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.தற்போது விரைவில் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப்போவதாகவும் அக்டோபர் 5ல் நிகழ்ச்சியின் கிராண்ட் லான்ச் நடக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 9ல் போட்டியாளர்களாக கலந்து கொள்பவர் யார் யார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.அந்தவகையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்டு வரும் நடிகை ஷபானா மற்றும் உமைர் கலந்து கொள்ளவுள்ளார்களாம்.அதேபோல் பாக்லயலட்சுமி சீரியல் நடிகைகள் அக்‌ஷிதா அசோக், நேஹா மேனன். சீரியல் நடிகராக திகழ்ந்து வரும் புவி அரசும் பிக்பாஸில் கலந்து கொள்ளவுள்ளார்களாம்.இவர்களை தொடர்ந்து தொகுப்பாளினி பார்வதியும் காமெடி நடிகர் பால சரவணனும், நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் மற்றும் நடிகை அம்ருதாவும் பிக்பாஸ் சீசன் 9ல் கலந்து கொள்ளவுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version