உலகம்

போர்க்குற்றங்களுக்கு நீதியை வழங்கி கடந்தகாலத் தவறைச் சரிசெய்ய இலங்கைக்கு வரலாற்று வாய்ப்பு!

Published

on

போர்க்குற்றங்களுக்கு நீதியை வழங்கி கடந்தகாலத் தவறைச் சரிசெய்ய இலங்கைக்கு வரலாற்று வாய்ப்பு!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அறிக்கை

உள்நாட்டுப்போரின் போது இடம்பெற்ற குற்றங்கள் உட்பட கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு தாமதமின்றி நீதியை வழங்கவும், கடந்தகால வரலாற்றில் ஒரு காத்திரமான மாற்றத்தை ஏற்படுத்தவும் இலங்கை அரசாங்கத்துக்கு ‘வரலாற்று வாய்ப்பு கிட்டியுள்ளது – இவ்வாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் ட்ரக் அறிக்கையிட்டுள்ளார்.

Advertisement

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு ஜெனீவாவில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது. இவ்வாறான பின்னணியில், இலங்கைக்கான தனது அண்மைய பயணத்தின் அவதானிப்புக்களை அடிப்படையாக வைத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் ட்ரக் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் உள்ளதாவது:-
வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட காணிகளை விடுவித்தல், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்துச் செய்தல் மற்றும் நீண்ட காலமாக அந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவித்தல் ஆகிய செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

சுயாதீனமான அரச வழக்குத்தொடுநர் அலுவலகத்தை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையை வரவேற்கும் அதேவேளையில், சிவில் சமூகத்தின் மீதான தொடர்ச்சியான துன்புறுத்தல், தன்னிச்சையான கைதுகள், சித்திரவதை மற்றும் காவலில் வைக்கப்பட்ட மரணங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய விடயங்கள் கரிசனைக்கு உரியவை.

Advertisement

அதேநேரம், காணாமல் போனவர்களின் குடும்பங்களைக் கண்காணிப்பது மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ந்து தன்னிச்சையான கைதுகள் குறித்தும் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். சித்திரவதை மற்றும் காவ லில் வைக்கப்பட்டுள்ளவர்களின் மரணங்கள் தொடர்பான வழக்குகளையும் நாம் கவனத்தில் கொண்டுள்ளோம்.

இலங்கையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் பயன்பாட்டை உடனடியாக நிறுத்தி வைப்பது அவசியமாகும். தேசிய ஒற்றுமை மற்றும் கடந்த கால துஷ்பிரயோகங்கள் மீண்டும் நிகழாமை என்பன. உண்மையான பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளுக்கான மரியாதை ஆகியவற்றில் சார்ந்துள்ளது. இராணுவமும், புலிகளும் தம்மீதான குற்றங்களை தாமதமின்றி ஒப்புக்கொள்ள வேண்டும் என்றுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version