இந்தியா

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவில் மோசடி; நாளை போராட்டம்

Published

on

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவில் மோசடி; நாளை போராட்டம்

இந்தியாவில் வாக்கு மோசடி இடம்பெற்றதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தி வரும் நிலையில் தேர்தல் ஆணைக்குழுவை கண்டித்து, நாடு முழுவதும் நாளை இரவு போராட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. 

கடந்த மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவில், மோசடி நடைபெற்றதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முறைப்பாடு செய்துள்ளன. அந்நிலையில் பீகார் மாநில வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடு நடைபெறுவதாகவும் குற்றம் சுமத்துப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

Advertisement

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  இதனைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார். 

அதன்படி, நாடாளாவிய ரீதியில் நாளை இரவு 8 மணிக்கு அனைத்து மாவட்டங்களிலும் பேரணி நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version