இலங்கை

மாணிக்கக் கல் அகழ்வின் போது தகராறு ; வயலுக்குள் கொல்லப்பட்டு கிடந்த குடும்பஸ்தர்

Published

on

மாணிக்கக் கல் அகழ்வின் போது தகராறு ; வயலுக்குள் கொல்லப்பட்டு கிடந்த குடும்பஸ்தர்

 மடுல்சீமை போகஹகும்புர எக்கிரிய பகுதியில் இன்று (26) அதிகாலை ஒருவர் கத்தியால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் 39 வயதுடைய பஹல கம்மலே கெடெரா, எகிரிய மடுல்சீமை பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

உயிரிழந்த நபருக்கும் அதே கிராமத்தில் உள்ள மற்றைய நபர் ஒருவருக்கும் மாணிக்கக் கல் அகழ்வின் போது ஏற்பட்ட நீண்ட காலம் நிலவிய கருத்து வேறுபாடு தற்போது கொலையில் முடிந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் இன்றையதினம் அதிகாலை உயிரிழந்த நபரை வீட்டிலிருந்து வெளியே உள்ள வயலுக்கு அழைத்துச் சென்று கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பசறை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் சடலம் தற்போது சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிவான் பார்வையிடதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

குறித்த பகுதியில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மடுல்சீமை பொலிஸ் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மடூல்சீமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version