பொழுதுபோக்கு

மாதவன் – சிம்ரனுக்கு தத்துப்பிள்ளை; முதல் படத்தில் தேசிய விருது வாங்கிய இந்த சிறுமி: யார் மகள் தெரியுமா?

Published

on

மாதவன் – சிம்ரனுக்கு தத்துப்பிள்ளை; முதல் படத்தில் தேசிய விருது வாங்கிய இந்த சிறுமி: யார் மகள் தெரியுமா?

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாக கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் அமுதா என்ற கேரக்டரில் நடித்து கவனம் ஈர்த்தவர் சிறுமி இப்போது வளர்ந்து பெரியவர் ஆகிவிட்டார். உண்மையில் இவர் யார் தெரியுமா? இந்த பதிவில் பார்ப்போம்.தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத படங்களை கொடுத்த இயக்குனர் மணிரத்னம். கடந்த 2002-ம் ஆண்டு, கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தை இயக்கியிருந்தார். மாதவன், சிம்ரன், நந்திதா தாஸ், பிரகாஷ்ராஜ், பசுபதி, எம்.எஸ்.பாஸ்கர், பாலாசிங் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர், இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார், படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இன்றுவரை இந்த படம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.இந்த படத்திற்கு இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் பல விருதுகள் வழங்கப்பட்டது. இந்த படத்தில் அமுதா என்ற இலங்கை தமிழர் பெண்ணாக நடித்து கவனம் ஈர்த்தவர் தான் நடிகை பி.எஸ்.கீர்த்தனா. இவர் உண்மையில் யார் என்றால், தமிழ் சினிமாவில் வித்தியாசமான பல படங்களை இயக்கி வெற்றி கண்ட நடிகர் பார்த்திபனின் மகள். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த இந்த சிறுமி, முதல் படத்திலேயே தேசிய விருதையும் வென்று அசத்தினார்.அதேபோல் தமிழக அரசின் மாநில விருதையும் வென்றிருந்த கீர்த்தனா, சினிமா எக்ஸ்பிரஸ் விருது, சௌத் இந்தியன் சினிமோட்டோஃகிபராபர்ஸ் விருது, என பல விருதுகளை வென்றிருந்தார். இந்த படத்திற்கு பிறகு, அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கண்ணத்தில் முத்தமிட்டால் படத்திற்கு பிறகு கீர்த்தனா வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது திருமணமாகி செட்டில் ஆகிவிட்ட கீர்த்தனா, படம் இயக்குவதில் ஆர்வமாக இருப்பதாக அவரது அப்பா பார்த்திபன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.அந்த பேட்டியில், இப்போது தான் நான் கீர்த்தனாவை மைண்ட்வாஷ் செய்து வருகிறேன். உனக்குள் ஒரு திறமை இருக்கிறது. அதை வேஸ்ட் செய்ய வேண்டாம். வேறு இயக்குனரின் படங்களில் நடிக்க விருப்பம் இல்லை என்றால் நீயே இயக்கி ஒரு படத்தில் நடி என்று சொல்லி இருக்கிறேன். பொருந்திருந்து தான் பார்க்க வேண்டும். அவருக்கு எங்காவது போய் மாட்டிக்கொண்டு தப்பான படமாக வந்துவிட்டால் என்ன செய்வது, இதற்கு முன்பு வாங்கி வைத்த பெயர் அனைத்தும் கெட்டுவிடுமே என்ற பயம் இருக்கிறது என பார்த்திபன் கூறியுள்ளார். முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்ற ஒரு சிறுமி, விரைவில் இயக்குனர் அவதாரம் எடுப்பதை பார்க்கலாம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version