டி.வி
மே தினத்தில் காதல், சுதந்திர தினத்தில் வீட்டை விட்டு வந்துட்டோம்; சின்ன மருமகள் சுவேதா லவ் ஸ்டோரி!
மே தினத்தில் காதல், சுதந்திர தினத்தில் வீட்டை விட்டு வந்துட்டோம்; சின்ன மருமகள் சுவேதா லவ் ஸ்டோரி!
விஜய் டிவயின் சின்ன மருமகள சீரியலில், நாயகியாக நடித்து வரும் நடிகை சுவேதாவுக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும், அவரது கணவர் நான் தான் என்றும் கூறியுள்ள ஒருவர் எனது பெயர் அஜித்குமார், அவரது பெயர் ஜெயஸ்ரீ என்றும் கூறியுள்ளார்.விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேபோல், ஒவ்வொரு சீரியலிலும் புதிது புதிதாக நடிகர் நடிகைகள் அறிமுகமாகி வருகின்றனர். குறிப்பாக இன்ஸ்டா உள்ளிட்ட வலைதளங்களின் மூலம் பிரபலமான பலரும், தற்போது விஜய் டிவியில் கமிட் ஆகி வருகின்றனர். அந்த வகையில், கடந்த 2024-ம் ஆண்டு விஜய் டிவயில் தொடங்கிய சின்ன மருமகள் சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் தான் சுவேதா.நவீன்குமார் நாயகனாக நடித்து வரும் இந்த சீரியலில் மாமனார் கேரக்டரில் ஒ.ஏ.கே.சுந்தர் நடித்து வருகிறார். கல்வியின் முக்கியத்துவம் மற்றும் குடும்பத்தில் நடக்கும் பிரச்னைகளை மையமான வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வரும் இந்த சீரியலில், தமிழ் செல்வி என்ற நாயகி கேரக்டரில் நடித்து வருபவர் தான் சுவேதா. இவருக்கு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் அதிகம்.சுவேதாவுக்கு திருமணம் ஆகவில்லை என்ற கூறப்பட்ட நிலையில், அவரது கணவர் நான் தான். எனது பெயர் அஜித்குமார், சுவேதாவின் நிஜ பெயர் ஜெயஸ்ரீ என்று ஒருவர் கூறியுள்ளார். கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்க அவர் அளித்த பேட்டியில், பொன்னியின் செல்வன் படம் பார்க்குமபோது தான எங்களுக்குள் காதல் காதல் வந்தது. நான் படம் பார்க்க சென்று அவரையே தான் பார்த்துக்கொண்ட இருந்தேன். எங்களுக்குள் காதல் இருந்தது. நான் தான் முதலில் காதலை வெளிப்படுத்தினேன்.எனக்கு கடந்த காலம் இருந்தது. ஊரில் பிஸினஸ் செய்து லாஸ் ஆகிவிட்டது. அதனால் என் குடும்பத்தில் ன்னை யாரும் மதிக்கவிலலை. குறிப்பாக என்னை நம்பவில்லை. அந்த நேரத்தில் என்னை நம்பியது சுவேதா மட்டும் தான். மே 1 தொழிலாளர் தினத்தில் நான் அவரிடம் ப்ரபோஸ் செய்தேன். அதன்பிறகு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்க்க முயற்சி செய்ததால், சுவேதா என்னை வீட்டில் வந்து பேசுமாறு சொன்னார். நான் போய் பேசும்போது பெரிய பிரச்னை ஆகிவிட்டது. அப்போது சுவேதா நம்ம வாழ்க்கையை நாம் பார்த்துக்கொள்வோம் என்ற சுதந்திர தினத்தில் என்னை அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்.எங்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் என யாரும் உதவி செய்யவில்லை. நாங்கள் கோயம்புத்தூர் சென்று 2023-ம் ஆண்டு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். அதன்பிறகு ஹோட்டலில் தங்கியிருந்தோம் சுத்தமாக பணம் இல்லை. இன்ஸ்டாவில் ப்ரமோஷன் போய் பணத்தை ரெடி பண்ணோம். இன்ஸ்டாகிராம் மூலம் தான் அவருக்கு சீரியல் வாய்ப்பு கிடைத்தது. 2026-ல் எல்லாம் மாறும் என்ற சொல்லி இருக்கிறார். அப்போது நாங்க்ள மீண்டும் திருமணம் செ்யதுகொள்வோம். என் பெயர் ஆதியும் இல்லை அவர் பெயர் சுவேதாவும் இல்லை.மீடியாவுக்காக நாங்கள் பெயரை மாற்றி வைத்துக்கொண்டோம். என் பெயர் அஜித்குமார், அவர் பெயர் ஜெயஸ்ரீ. ஷூட்டிங்கிற்காக வெளியில் செல்லும்போது பாஸ்போர்ட்டில் அந்த பெயர் வரும்போது தான் எங்களின் உண்மையான பெயர் ஞாபகம் வரும் என்ற கூறியுள்ளார்.