சினிமா

வாட்டர் மெலன் ஸ்டார் மீது புகார் அளித்த நடிகை ஷகிலா

Published

on

வாட்டர் மெலன் ஸ்டார் மீது புகார் அளித்த நடிகை ஷகிலா

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம் “வாட்டர் மெலன் ஸ்டார்” திவாகர் சமீபத்திய பேட்டிகளில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததால், நடிகை ஷகிலா அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

“வாட்டர் மெலன் ஸ்டார்” என்று அழைக்கப்படும் திவாகர், ரீல்ஸ் மூலம் பிரபலமானவர், நடிகர் சூர்யா கஜினி திரைப்படத்தில் வாட்டர் மெலனை வைத்துக்கொண்டு ஸ்டைலாக நடித்த காட்சியை திவாகர் ரீ கிரியேட் செய்தார். 

Advertisement

இந்த காட்சி மூலம் பிரபலமடைந்தவர் தன்னை தானே “வாட்டர் மெலன் ஸ்டார்” என அழைத்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் தனது பேச்சுக்கள் மற்றும் செயல்களால் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் நடிகர் சூரியை விட தான் உயர்ந்தவன் ,எந்த விதத்தில் நான் அவரை விட தகுதி இல்லாதவன் என அவர் பேசிய பேச்சு சர்சைக்குரியானது. 

அதனை தொடர்ந்து வந்த நேர்காணல் மற்றும் பேட்டியில் சர்சைக்குரிய பதில்களை கூறியதால் மேலும் பிரச்சனைகளும் அதிகமானது. இதனால் திவாகரை நெட்டிசன்கள் திட்டியும் அவர் செய்த தவறை புரிந்துக் கொள்ளும்படி வீடியோக்களும் கமெண்டுகளும் பகிர்ந்து வருகின்றனர். 

Advertisement

ஆனால் திவாகர் அதனையெல்லாம் காது கொடுத்து கேட்பதாக தெரியவில்லை.

சமீபத்தில் நடந்த ஆணவக்கொலையை மையப்படுத்தி அது சரிதான் என்ற கருத்தை முன்வைத்து கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இதனை கண்டித்து மற்றும் தொடர்ந்து சர்ச்சை ஏற்படுத்தி வருவதால் திவாகர் மீது நடிகை ஷகீலா புகார் கொடுத்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version