இலங்கை
வேம்பொடுகேணி சீ. சீ.த.க.பாடசாலையில் கணிதபாட ஆசிரியர் இன்றி அல்லல்படும் மாணவர்கள்!
வேம்பொடுகேணி சீ. சீ.த.க.பாடசாலையில் கணிதபாட ஆசிரியர் இன்றி அல்லல்படும் மாணவர்கள்!
பெற்றோர் சுட்டிக்காட்டு
இத்தாவில் வேம்பொடுகேணி சீ. சீ.த.க. பாடசாலையில் கணித பாட ஆசிரியர் இன்மையால் க.பொ.த.சாதாரண தரப்பரீட் சைக்குத் தோற்றும் மாணவர்கள் கணித பாடத்துக்குத் தோற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
கணிதபாட ஆசிரியர் இன்மையால் பாடசாலைத் தவணை ஆரம்பித்து ஒருவாரமாகியும் மாணவர் தேர்ச்சி அறிக்கை வழங்கப்படவில்லை. கிளிநொச்சி கல்விவலயப் பரீட்சையில் மாணவர்கள் தோற்றிய நிலையில் கணித பாடத்துக்குரிய விடைத்தாள்கள் இன்னமும் திருத்தப்படவில்லை. இதனால் கணித பாடத்துக்குரிய மதிப்பெண் இன்மையால் தேர்ச்சி அறிக்கை வழங்கப்படவில்லை என்று பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாகப் பாடசாலை நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு கேட்டபோது பாடசாலையில் கணித பாடத்துக்கு இரு ஆசிரியர்கள் உள்ளனர் என்றும், ஒருவர் பிரசவ விடுமுறையிலும் மற்றுமொருவர் சுகயீன விடுமுறையிலும் உள்ளனர் என்றும் பதிலளிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.