திரை விமர்சனம்

ஹை மூவ்மெண்ட்ஸ் எதுவும் இல்லையா.? ‘கூலி’ விமர்சனங்களை அள்ளி வீசும் ரசிகர்கள்

Published

on

ஹை மூவ்மெண்ட்ஸ் எதுவும் இல்லையா.? ‘கூலி’ விமர்சனங்களை அள்ளி வீசும் ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் இன்றைய தினம் உலகளவில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தப் படத்திற்கு தமிழ்நாட்டில் ஒன்பது மணிக்கு சிறப்பு காட்சி அனுமதி கிடைத்துள்ளதோடு, ஏனைய மாநிலங்களில் அதற்கு முன்னதாகவே படத்தை வெளியிடுவதற்கும் அனுமதி கிடைத்திருந்தது. இதனால் முதலில் படத்தை பார்த்த ரசிகர்கள் தமது விமர்சனங்களை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.அதன்படி கூலி திரைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், கூலி படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை சுனாமி போலத்தான் உள்ளது. இதன் ஸ்க்ரீன் பிளே அபாரமாக உள்ளது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இசை புல்லரிக்க செய்கின்றது. மொத்தத்தில் இந்த படம் தியேட்டர்களில் கொண்டாட்டமாக காணப்படுகின்றது என்று புகழ்ந்து இருந்தார்.இன்னும் ஒரு ரசிகன், கூலி படத்தின் முதல் பாதி டல்லாக உள்ளது. மோசமான திரைக்கதையால் போர் அடிக்கின்றது. இந்தப் படத்தில் ஹை மூவ்மெண்ட்ஸ் என்று எதுவுமே இல்லை என்று தெரிவித்திருந்தார்.மற்றுமொரு ரசிகர், இந்த படத்தில் சூப்பர் ஸ்டாரின் சக்தி வீணாகிவிட்டது, நாகார்ஜுனாவின் ஸ்டைலிஷ் பயன்படுத்தப்படவில்லை. ஸ்ருதியின் கேரக்டர் பரவாயில்லை. அனிருத்தின் இசை சராசரி, 4 பாடல்கள் மிகையாக இருக்கிறது. இடைவேளையின் காட்சிகளை வெறுமனே கடந்து செல்லக்கூடியதாகவே உள்ளது. விண்டேஜ் பாடல் மட்டும் தான் மீட்பர் என குறிப்பிட்டு இருந்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version