பொழுதுபோக்கு
14 குழந்தைகளுடன் நடிப்பு; அன்னைக்கு நான் செத்துருப்பேன், தப்பிச்சிட்டேன்: சிவாஜி த்ரோபேக் சம்பவம்!
14 குழந்தைகளுடன் நடிப்பு; அன்னைக்கு நான் செத்துருப்பேன், தப்பிச்சிட்டேன்: சிவாஜி த்ரோபேக் சம்பவம்!
சிவாஜி கணேசன் என்றால் இந்திய சினிமாவில் அறிமுகம் தேவையில்லை. அவரது பெயரே இந்திய சினிமாவின் அடையாளம் என்பது குறிப்பிடத்தக்கது. நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து பிறகு சினிமாவுக்குள் வந்தவர்; தனது அபாரமான நடிப்பு திறமையால் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் கட்டிப்போட்டார்.அதனால் அவரை அனைவரும் நடிகர் திலகம் என்று அழைப்பார்கள். தொடர்ந்து ஹீரோவாக நடித்துவந்த அவர்; காலப்போக்கில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்தார். கடைசியாக படையப்பா படத்தில் நடித்த அவர் கடந்த 2001ஆம் ஆண்டு உயிரிழந்தார்.இதற்கிடையே அவருக்கு ராம்குமார், பிரபு என்ற மகன்களும், இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். இவர்களில் பிரபு ஃபேமஸான நடிகர். சிவாஜி கணேசன் சென்னை தியாகராய நகரில் ஒரு வீட்டினை வாங்கி அதற்கு அன்னை இல்லம் என்று பெயர் சூட்டினார்.சிவாஜி கணேசன் நடித்து 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழித் திரைப்படம் தான் எங்க மாமா. இது ஏசி திருலோக்சந்தர் இயக்கியதுமற்றும் பிகேவி சங்கரன் மற்றும் ஆறுமுகம் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இப்படத்தில் சிவாஜி கணேசன் , ஜெயலலிதா , வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோர் நடித்துள்ளனர் .இது 1968 ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படமான பிரம்மச்சாரியின் ரீமேக் ஆகும். குழந்தையாகக் கைவிடப்பட்ட கோடீஸ்வரன், 12 இளம் அனாதைகளுடன் அடமானம் வைக்கப்பட்ட வீட்டில் வசிக்கிறார். ஒரு இளம் பெண்ணை இறப்பிலிருந்து காப்பாற்றும்போது விஷயங்கள் தலைகீழாக மாறுகின்றன.இந்த படத்தில் சிவாஜி அவர்கள் 14 குழந்தைகளுடன் சேர்ந்து நடித்திருந்தார்.அந்த அனுபவத்தை பற்றி ஒரு நேர்காணலில் அவர் பேசுகையில், “குழந்தைகளுடன் சேர்ந்து நடிப்பது கடினம் தான். எந்த நேரம் என்ன ஆகும் என்று சொல்லவே முடியாது. நான் எங்க மாமா படத்தில் 14 குழந்தைகளுடன் சேர்ந்து நடித்தேன். ஒரு குழந்தையுடன் நடிப்பதே பெய்ய வேலை தான். இப்படி 14 குழந்தைகளுடன் நடித்த போது பல விதமான சம்பவங்கள் நடந்தன. அதில் ஒன்று தான் ஜயண்ட் வீலில் சுற்றும் போது நடந்தது. அன்று ஒரு குழந்தையை நான் கையில் வைத்துக்கொண்டு ஒரு தொட்டியில் இருந்தேன், அப்போது அது மேலே பொய் சுற்றி பிறகு கீழே வரும். அப்போது என் கூடி இருந்த ராம் என்கிற சிறுவன் அந்த தொட்டியின் நாதாங்கி, அதாவது அந்த தொட்டிக்கு போட்டிருக்கும் செயின் போல உள்ளதை கழட்டி விட்டுட்டான். நான் அன்றைக்கே கீழே விழுந்துருப்பேன், ஆனால் எப்படியோ அந்த குழந்தையும் கையில் பிடித்து கொண்டு கீழே வந்தேன். அதனால் குழந்தைகள் இருந்தால் கண்டிப்பாக இப்படியெல்லாம் நடக்க தான் செய்யும். நாம் தான் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” என்று சிரிப்புடன் கூறினார்.