இலங்கை

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

Published

on

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

2025 ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்க கலந்துரையாடல் இன்று (25) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

நகர மற்றும் கிராமிய வீடமைப்பு நிர்மாணத் திட்டங்கள், நகர அபிவிருத்தித் திட்டங்கள், நகர திட்டமிடல் திட்டங்கள், கழிவு முகாமைத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டங்கள், நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டங்கள் போன்ற துறைகள் குறித்து இங்கு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

Advertisement

இந்தத் துறைகளுடன் தொடர்புடைய நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திலும் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.

குறிப்பாக, கடந்த கால பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் தொடங்குவதிலும், தொடங்கப்பட்ட திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இந்த ஆண்டு தொடங்கப்பட்ட திட்டங்களை இந்த ஆண்டு குறிப்பிட்ட இலக்குகளை நோக்கி வழிநடத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Advertisement

அரசாங்கம் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுக்கு முறையாக நிதி ஒதுக்கியிருந்தாலும், அவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முறையாகப் பயன்படுத்தப்படாவிட்டால் அது ஒரு பிரச்சினையே என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

வீடுகள் மற்றும் கட்டிடங்களை நிர்மாணிப்பதிலும், நகர திட்டமிடலிலும் சம்பந்தப்பட்ட பகுதி மக்களின் கருத்துகள் மற்றும் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, முந்தைய அரசாங்கங்களால் தங்கள் சொந்த விருப்பப்படி மேற்கொள்ளப்பட்ட நிர்மாணங்கள் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்படாத மற்றும் குறைந்த பயன்பாடுள்ள அரசாங்க கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தொடங்கப்பட்ட 18 பாலம் நிர்மாணிக்கும் திட்டங்கள் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளதாகவும், அந்தக் நிர்மாணப் பணிகள் காரணமாக தற்காலிகமாக பயன்படுத்தப்பட்ட வீதிகள் சதுப்பு நிலங்கள் போல மாறியுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

Advertisement

அந்தத் திட்டங்களுடன் தொடர்புடைய நிர்மாணங்களை பூர்த்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version