இலங்கை
முக்கியமான நபர்கள் ஊடக சந்திப்பில் மாயம்
முக்கியமான நபர்கள் ஊடக சந்திப்பில் மாயம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஊடக சந்திப்பை நடத்திய போதும், நாட்டின் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவை இந்த ஊடக சந்திப்பில் காணவில்லை. அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோரும் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும் இவர்கள் இருவரும் ஊடக சந்திப்புக்கு வரவில்லை.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க கைது தொடர்பில் ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிக்கை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரளவால் ஊடக சந்திப்பில் வாசிக்கப்பட்டது.