இந்தியா

அக்னி-5 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய இந்தியா

Published

on

அக்னி-5 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய இந்தியா

அணு ஆயுதங்களை ஏந்திக்கொண்டு தாக்கும் திறன் படைத்த அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது.அக்னி 5 என்பது கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணையாகும். 

இது, மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் தயாரிக்கப்படுகிறது. இந்த ஏவுகணையானது மூன்று நிலைகளை கொண்டது. 

Advertisement

சாலை மூலமாக வாகனங்களில் கொண்டு செல்லும் வசதி கொண்டது. திட எரிபொருளை கொண்டு இயக்கப்படுவதாகும். உலகின் அதிவேகமான ஏவுகணைகளில் இதுவும் ஒன்று.

அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று 7 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிலுள்ள இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது. 

இந்த ஏவுகணை சோதனை வெற்றியின் மூலம், இதனால் இந்திய பாதுகாப்பு படைகளின் வலிமை மேலும் அதிகரித்துள்ளது. ஒடிசாவின் சந்திப்பூர் தளத்தில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisement

முழுமையாக அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணை சோதனை தொழில்நுட்ப ரீதியாகவும், செயல்பாட்டு ரீதியாகவும் சிறப்பாக அமைந்ததாக கூறப்பட்டுள்ளது. ஸ்ட்ராட்டஜிக் போர்சஸ் கமாண்ட் எனப்படும் ராஜதந்திரப் படைத்தலைமை தலைமையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version