சினிமா

அடுத்தடுத்து வில்லன் அவதாரம்…புதிய கெட்டப்புக்கு மாறும் ரவி மோகன்..!

Published

on

அடுத்தடுத்து வில்லன் அவதாரம்…புதிய கெட்டப்புக்கு மாறும் ரவி மோகன்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் புதிய படம்தான் ‘பராசக்தி’. இயக்குநர்  சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘பராசக்தி’ படத்தில் படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் மற்றும் பாசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.இதனிடையே பராசக்தி படத்தின் மூலம் வில்லனாக மிரட்ட இருக்கிறார் ரவி மோகன். அந்தப் படத்தில் அவர் கேரக்டர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெரும் என்று பேசப்படுகிறது. அவருடைய அசத்தலான நடிப்பின் காரணமாக அடுத்தடுத்து வில்லன் கதாபாத்திரத்திற்கான வாய்ப்பு வரத் தொடங்கிவிட்டது.அடுத்து, தற்போது உருவாகி வரும் “பென்ஸ்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரவி மோகன் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸுடன் கைகோர்க்கும் வில்லனாக அவர் வருகிறார். ரசிகர்கள் மத்தியில் லாரன்ஸின் ஸ்டண்ட் மற்றும் மாஸ் காட்சிகள் எப்போதும் வைரலாகும் நிலையில், அதற்கு சவால் விடும் வில்லனாக ரவி மோகனின் பங்கு பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.அதுவே போதாதென, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள “கைதி 2” மற்றும் “விக்ரம் 2” படங்களிலும் முழு வில்லனாக நடிக்கிறார் ரவி மோகன். லோகேஷ் உருவாக்கிய LCU இல் வில்லன் இடத்தை பிடிப்பது எந்த நடிகருக்கும் பெரிய வாய்ப்பு. இதில் ரவிமோகன் கேரக்டர் மிக முக்கியமானதாக இருக்கும் என படக்குழுவினர் கூறுகிறார்கள்.இப்போது தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு சமமான முக்கியத்துவம் வில்லனுக்கும் கிடைக்கிறது. பராசக்தி மூலம் வில்லன் அவதாரம் எடுத்து, பென்ஸ், கைதி 2, விக்ரம் 2 போன்ற ஹிட் காமினேசன்களில் இடம்பிடித்துள்ள ரவி மோகன், தமிழ் சினிமாவின் next big villain என்ற பட்டத்தை பெறத் தயாராகியுள்ளார். அவரது தீவிரமான நடிப்பும், வில்லன் கேரக்டர்களில் கொண்டிருக்கும் தனித்துவமும், அடுத்த சில ஆண்டுகளில் அவரை முன்னணி எதிர்மறை கதாபாத்திர நடிகராக மாற்றப்போவதை ரசிகர்கள் நம்பிக்கையுடன் எதிர்நோக்குகிறார்கள்.இந்நிலையில் ரவி மோகனின் வில்லன் கேரக்டர்களை திரையில் காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version