உலகம்

அமெரிக்காவில் பள்ளி வளாகத்தில் துப்பாக்கி சூடு – இருவர் மரணம்

Published

on

அமெரிக்காவில் பள்ளி வளாகத்தில் துப்பாக்கி சூடு – இருவர் மரணம்

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள மினியபோலிஸ் கத்தோலிக்க பள்ளியில் இன்று காலை மாணவர்களுக்கான வழக்கமான பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. 

அப்போது பள்ளி வளாகத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த நபர், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார்.

Advertisement

இதனால் ஆசிரியர்களும், மாணவர்களும் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். 

இந்த தாக்குதல் சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர்.

படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், “மின்னசோட்டாவில் பள்ளி வளாகத்தில் ஒரு சோகமான துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. எப்.பி.ஐ. அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version