பொழுதுபோக்கு

அம்மா ஒரே மூச்சில 16 பாட்டு பாடுறாங்க, நீ என்னடா 2-3 தடவ மூச்சி வாங்குற? இளையராஜா பற்றி எஸ்.பி.பி. த்ரோபேக்

Published

on

அம்மா ஒரே மூச்சில 16 பாட்டு பாடுறாங்க, நீ என்னடா 2-3 தடவ மூச்சி வாங்குற? இளையராஜா பற்றி எஸ்.பி.பி. த்ரோபேக்

‘தென்னகத்து இளையநிலா’ என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் பாடகி எஸ்.ஜானகி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 48 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்துள்ளார். மெல்லிசை முதல் நாட்டுப்புற பாடல்கள் வரை அனைத்து வகைப் பாடல்களையும் பாடி, உணர்வுகளை வெளிப்படுத்தும் தனித்துவமான குரல்வளம் கொண்டவர் இவர். சிறந்த பின்னணி பாடகிக்கான 4 தேசிய விருதுகள் உட்பட பல மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கலந்துகொண்டார். அப்போது, எஸ்.ஜானகிக்கு இருந்த அபாரமான மூச்சுத்திறன் குறித்து அவர் பெருமையாகப் பேசினார். ஒருமுறை பாடல் பதிவின்போது, எஸ்.ஜானகி ஒரே மூச்சில் 16 சரணங்களை பாடி முடித்திருக்கிறார். இதைப் பார்த்த இசையமைப்பாளர் இளையராஜா, “ஜானகி அம்மா ஒரே மூச்சில் 16 பாட்டு பாடுறாங்க, நீங்க என்னடா 2-3 தடவை மூச்சு வாங்குறீங்க?” என மற்ற பாடகர்களைக் கேட்டதாக எஸ்.பி.பி. கூறினார்.எஸ்.ஜானகியின் மூச்சுத்திறனை உலகிலேயே யாருக்கும் கண்டதில்லை என்றும், ஒருமுறை பாடினால் போதும், முதல் டேக்கிலேயே எந்தவிதத் தவறும் இல்லாமல் பாடிவிடுவார் என்றும் எஸ்.பி.பி. புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், அவருடைய திறமைக்கு இணையாக ஒரு போட்டி மனப்பான்மையுடன் தான் செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.‘சின்னஞ் சிறுகிளியே’, ‘செந்தூரப் பூவே’ போன்ற பாடல்கள் அவரது குரல்வளத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இன்றும் இந்தப் பாடல்கள் ரசிகர்களால் திரும்பத் திரும்பக் கேட்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version