இலங்கை

அஸ்வெசும இரண்டாம் கட்டப் பதிவு முன்னெடுப்பு – பெரும் வரிசையில் காத்திருப்பு!

Published

on

அஸ்வெசும இரண்டாம் கட்டப் பதிவு முன்னெடுப்பு – பெரும் வரிசையில் காத்திருப்பு!

நாடளாவிய ரீதியில் அஸ்வெசும இரண்டாம் கட்டக் கொடுப்பனவுக்கு தகுதியானவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் திங்கட்கிழமை (18) முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதுவரை அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு கிடைக்கப்பெறாத, கொடுப்பனவு பெறத் தகுதியான குடும்பங்களை இனங்காணும் செயற்பாடுக்கு அமைய இந்தப் பதிவு இடம்பெற்று வருகிறது.

Advertisement

இந்நிலையில், சம்பந்தப்பட்ட ஏராளமான பயனாளிகள் நுவரெலியா பிரதேச செயலகத்திற்குச் சென்று, கொடுப்பனவு பெறுவதற்காக தங்களது விபரங்களை பதிவு செய்துகொள்வதற்காக நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியோரத்தில் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version