இலங்கை

ஆதனவரியில் மாற்றம் இவ்வருடத்தில் இல்லை; வவுனியா மாநகரசபை தீர்மானம்

Published

on

ஆதனவரியில் மாற்றம் இவ்வருடத்தில் இல்லை; வவுனியா மாநகரசபை தீர்மானம்

மாநகரசபையின் ஆதனவரி அறவீட் டில் எந்தவிதமான மாற்றமும் செய் யப்படாமல் 8:10 என்ற அடிப்படை யில் அறவிடப்படும் என்று வவுனியா மாநகரசபை விசேட அமர்வில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த அமர்வில் சபையால் தீர்மா னிக்கப்பட்டுள்ள ஆதனவரியைக் குறைக்குமாறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கோரிக்கை களை முன்வைத்தனர். இதனால் அந்த அமர்வில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் அதுதொடர்பாக ஆராய் வதற்கு விசேட அமர்வு ஒன்று நடத்தப் படும் என முதல்வர் தெரிவித்திருந் தார். அதற்கமைய வவுனியா மாநகர சபையின் ஆதனவரி தொடர்பான விசேட அமர்வு கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது.
இதில் குழுநிலை விவாதத்தில் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆதனவரியைக் குறைக்கவேண்டும். மக்கள்மீது வரிச்சுமையை ஏற்படுத் தக்கூடாது என்ற கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.
எனினும் மாநகரசபையில் அபிவி ருத்திப் பணிகளை மேற்கொள்வ தற்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள் ளமை, ஊழியர்களின் சம்பளம் போன்றவற்றைச் சுட்டிக்காட்டி ஆதன வரியை குடியிருப்புகளுக்கு 8வீதமா கவும், வர்த்தக நிலையங்களுக்கு 10 வீதமாகவும் அறவிடவேண்டிய தேவை இருப்பதாக ஆளுந்தரப்பு உறுப்பினர் களால் தெரிவிக்கப்பட்டது. இதனை யடுத்து 8:10 என்ற அடிப்படை யிலேயே ஆதனவரியை அறவிடுவது டன் அதில் மாற்றத்தை செய்யமுடியுமா என்பதை அடுத்தவருடம் ஆராயலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version