இலங்கை

இனி தான் ஆட்டம் ஆரம்பம் ; அநுர அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Published

on

இனி தான் ஆட்டம் ஆரம்பம் ; அநுர அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை கிடைத்தவுடன் இது முடிவடையாது அதன் பின்னர் தான் நாங்கள் ஆரம்பிப்போம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு  நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே ரஞ்சித் மத்தும பண்டார மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

Advertisement

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

ரணிலுக்கு பிணை கிடைத்தவுடன் அநுர அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வேலையில் தீவிரமாக ஈடுபடுவோம்.

ஜேவிபி எத்தனை குற்றச்செயல்களில் இதற்கு முன்னர் ஈடுபட்டிருக்கின்றது.

Advertisement

நூற்றுக்கணக்கான பேருந்துகளை அழைத்து, வங்கியை உடைத்து, மக்களை கொன்று என்று பல பாரிய குற்றச்செயல்களில் ஜேவிபி கடந்த காலங்களில் ஈடுபட்டுள்ளது. அப்படியென்றால், அதற்கெதிராகவும் வழக்கு தொடர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version