பொழுதுபோக்கு

இளையராஜா பாட்டுக்கு தடை போட்ட ஆல் இந்தியா ரேடியோ: அந்த பாடல்களை ரீமேக் செய்த சுந்தர்.சி: ரெண்டுமே ஹிட்டு தான்!

Published

on

இளையராஜா பாட்டுக்கு தடை போட்ட ஆல் இந்தியா ரேடியோ: அந்த பாடல்களை ரீமேக் செய்த சுந்தர்.சி: ரெண்டுமே ஹிட்டு தான்!

ஆல் இந்தியா ரேடியோவில் தடை செய்யப்பட்ட முக்கிய 2 பாடல்கள் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் உருவானது. அதேபோல் இந்த இரு பாடல்களுமே சுந்தர்.சி நடித்த இரு படங்களுக்கு ரீமேக் செய்யப்பட்டது ஒரு சுவாரஸ்யமான தகவல்.சினிமாவை பொறுத்தவரை இசைக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். சினிமா உருவாவதற்கு முன்பாக இருந்த நாடகங்களிலும் இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு படம் வெளியாகும் முன்பே அந்த படத்தில் பாடல்கள் ரிலீஸ் செய்யப்பட்டுவிடும். கடந்த காலங்களில் பாடல்கள் வெளியீட்டின்போது கேசட்கள், மூலம் வெளியிடப்படும். ஆனால் இப்போது பலரும் ஆன்லைனில் பார்த்துவிடுகிறார்கள். இதனால் பாடல் குறித்து ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை உடனடியாக தெரிவிக்கிறார்கள்.அதே சமயம் 70,80 மற்றும் 90 காலக்கடங்களில் சமூகவலைதளங்களின் பயன்பாடு இல்லை. இதனால் ஒரு படத்தின் பாடல்கள் வெளியாகிறது என்றால், அது ஆல் இந்தியா ரேடியோ, இலங்கை வாணொலி, உள்ளிட்ட ரேடியோ தளங்களில் மூலம் தான் கேட்க முடியும். இப்போது யூடியூப்களில் பல மில்லியன் வியூஸ்கள் போயிருக்கும் பாடல்களை பட்டியலிடுவது போல், அந்த காலக்கட்டத்தில், இலங்கை வாணொலியில் அதிக முறை ஒளிபரப்பு செய்யப்பட்ட பாடல்களை பட்டியலிடுவார்கள்.அந்த அளவிற்கு வாணொலியில் வெளியாகும் பாடல்களை கேட்க, ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி இருக்கிறார்கள். இப்படி சினிமா பாடல்களுக்கு முக்கிய தளமாக இருந்த ஆல் இந்தியா ரேடியோவில் 2 தமிழ் பாடல்கள் தடை செய்யப்பட்டுள்ளது பலரும் அறியாத ஒரு தகவல். இந்த 2 பாடல்களுமே இளையராஜா இசையமைப்பில் வெளியான பாடல். அதில் ஒரு பாடலை கங்கை அமரனும், மற்றொரு பாடலை வாலியும் எழுதியுள்ளனர். என்னென்ன பாடல் என்பதை பார்ப்போமா?கேட்டேலா அங்கே (1976)1976-ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜாவின் இசையில் அதே ஆண்டு வெளியான 4-வது படம் தான் பத்ரகாளி. ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சிவக்குமார், ராணி சந்திரா, மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் ஸ்ரீனிவாசன், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு, அனைத்து பாடல்களையும் வாலி தான் எழுதியிருந்தார்.இதில், இடம் பெற்ற கேட்டேலா அங்கே என்ற பாடலை பி.சுசீலா பாடியிருந்தார். இந்த படல் ஆல் இந்தியா ரேடியோவில் தடை செய்யப்பட்டது. பாடல் வரிகள் மிகவும் மோசமாக இருந்ததால் தடை செய்யப்பட்டதாக தகவல்கள் உள்ளது. இந்த பாடலை, கடந்த 2010-ம் ஆண்டு சுந்தர்.சி. நடிப்பில் வெளியான குரு சிஷ்யன் படத்தில் ரீமேக் செய்திருப்பார் இசையமைப்பாளர் தீனா.ஓரம் போ, ஓரம் போ ருக்குமணி வண்டி வருது (1979)இளையராஜாவின் இசையில் 1979-ம் ஆண்டு வெளியான படம் தான் பொண்ணு ஊருக்கு புதுச சுதாகர், விஜயன், சரிதா ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படத்தை ஆர்.செல்வராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் கங்கை அமரன் எழுதிய ஓரம் போ, ஓரம் போ ருக்குமணி வண்டி வருது பாடலை, இளையராஜா, சுதாகர் இருவரும் இணைந்து பாடியிருந்தனர். ஆனால் இந்த பாடல் மோசகமாக இருக்கிறது என்பதால் ஆல் இந்தியா ரேடியோவில் தடை செய்யப்பட்டதாக தகவல்கள் உள்ளது. இந்த பாடலை கடந்த 2009-ம் ஆண்டு சுந்தர்.சி. நடிப்பில் வெளியான ஐந்தாம் படை படத்திற்காக டி.இமான் ரீமேக் செய்திருந்தார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version